Pages

Saturday, May 09, 2009

கொடைக்கானல்

இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்கும் இடம் கொடைக்கானல். வானை வம்பிழுக்கும் நெடிய மரங்கள்; மரங்களுக்கு அடைக்கலம் தரும் மலைகள்; இதுவரை பார்த்திராத பறவைகள்; என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் இடம். மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது கொடைக்கானல்.

லியோட்டினன்ட் வார்ட் என்ற ஆங்கிலேயர் மலைப்பகுதிகளை சர்வே செய்வதற்காக 1821ம் ஆண்டில் முதல் முறையாக கொடைக்கானல் மலை ஏறுகிறார். அவரைத் தொடர்ந்து 1834ம் ஆண்டில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் தேவதானப்பட்டி வழியாக கொடைக்கானலுக்குள் வருகிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து 1836ல் டாக்டர் ஒயிட் என்பவர் கொடைக்கானல் மலையில் தாவர ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்.

1845ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷனரி இரண்டு பங்களாக்களை கொடைக்கானலில் கட்டுகிறது. அவற்றின் பெயர் சன்னிசைடு மற்றும் ஷெல்டன் என்பதாகும். அதைத் தொடர்ந்து ஆறு அமெரிக்க குடும்பங்கள் கொடைக்கானலில் குடியேறுகின்றன. அந்த குடும்பங்கள்தான் கொடைக்கானலில் முதல் முறையாக வசித்த குடும்பங்கள்.

அதைத் தொடர்ந்து அப்போது இந்தியாவில் இருந்த ஆங்கிலேய மற்றும் ஐரோப்பியர்கள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கினர். கொடைக்கானலை தங்களது கோடைகால வசிப்பிடமாக மாற்றிக்கொண்டனர். இப்படி வெளிநாட்டவர் ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்த கொடைக்கானலை 20 ஆம் நூற்றாண்டில்தான் உள்ளூர் மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.


 
பைக்கில் நண்பர்களோடு சென்றதால் தூரமும், களைப்பும் தெரியவில்லை. செல்லும் வழியிலும், கொடைக்கானலிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். பைக்கில் செல்லும்போது எடுக்கப்பட்டவை. தரம் சற்று குறைவாகத்தான் இருக்கும்.



 
வாய்ப்புள்ள அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டிய இடம் கொடைக்கானல்.

12 comments:

  1. ஜோதி,

    உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. நினைத்தாலே இனிக்கும் கொடைக்கானல், புகைபடங்கலுக்கு நன்றி

    ReplyDelete
  3. கொடைக்கானலிலிருந்து வந்த பின்னும் பிரமிப்பு தீரவில்லை. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பித்தன்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  4. போய் பார்த்திடுவோம்.

    ReplyDelete
  5. நிச்சயமாகக் காண வேண்டிய இடம். அவசியம் பாருங்கள். கருத்துக்கு நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  6. நண்பரே, இரு சக்கர வாகனத்தில் சென்றதாக கூறுகிறீர்கள். ஆனால் நிறைய இடங்களை நீங்கள் விட்டுவிட்டீர்களே! அங்கு நிலவிய குளிர் உங்களை நிறைய இடங்களை பார்க்க விடாமல் செய்துவிட்டது என நினைக்கிறேன். நான் சொல்வது சுற்றுலாத் தளத்தை அல்ல. வழியிலேயே நிறைய அழகான, ஆபத்தான கொண்டை வளைவுகள் இருக்கின்றன. மேலும் லேக் வியூ என்ற ஒரு இடத்தையும் விட்டுவிட்டீர்கள். பரவாயில்லை. அடுத்தமுறை செல்ல வாய்ப்பு கிடைத்தால் பொறுமையாக நிதானமாக படமெடுங்கள்.
    இப்பொழுது நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை விட இன்னும் அதிகமான இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் உங்களுக்கு கி்டைக்கும். நன்றி...

    ReplyDelete
  7. வான்முகிலன்,

    உங்கள் கருத்து முற்றிலும் சரி. பார்த்த இடங்களைவிடப் பார்க்காதது அதிகம். அங்குள்ள நண்பர்களை வேறு சந்திக்க வேண்டியிருந்ததால் நேரமின்மை. அடுத்த முறை நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களைப் படமெடுக்கிறேன். விரிவான கருத்துக்கு நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  8. உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. all pictures are good. enjoy the life with friends also with care. thanks for my memories.

    ReplyDelete
  10. Ramkumar,

    மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  11. Kmr,

    I am blessed with best friends. Anyway, I will remember your statement. Thanks for your suggestion.

    Sri....

    ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!