திண்டுக்கல் கோட்டையின் தொடர் பதிவு. கோட்டையின் உச்சியில் அமைந்துள்ள சிறிய, அழகான கோயில். தொல்லியல் துறை இன்னும் கூடுதல் கவனமெடுத்துப் பராமரிக்க வேண்டிய இடம். உள்ளூர் மக்களுக்கே கோயிலைப் பற்றிய விவரங்கள் சரிவரத் தெரியவில்லை. அரசாங்கம் கோயில் சம்பந்தமான புத்தகம் வெளிவரச் செய்ய வேண்டும். நமது கலைப்படைப்புகள் குறித்த தகவல்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
கோயிலின் கருவறைகளில் சிலை எதுவும் இல்லை. விசாரித்ததில் திருவிழாக் காலங்களில் மட்டும் சிலை வெளியிலிருந்து தருவிக்கப்படும் என்றார்கள். காரணம் தெரியவில்லை. அற்புதமான சிற்பங்களும், கோபுரமும், உட்பகுதியும், சுற்றுப்புறமும் காணக் கிடைக்கின்றன. தகவல்கள் மட்டும் கிடைக்கப் பெறவில்லை. இதுகுறித்துத் தகவல் தந்தால் நிச்சயம் பதிவில் சேர்த்துவிடுகிறேன். எப்படியிருந்தாலும், மலைமேல் இத்தகைய கலைப்படைப்பை நிர்மாணித்த தமிழனின் ஆற்றலும், அறிவும் வணங்கத்தக்கது.
அற்புதமான புகைப்படங்கள் நண்பரே. மிக்க நன்றி.இவ்வளவு நாள் உங்கள் வலைப்பக்கத்திற்கு வராமல் போய்விட்டனே??
ReplyDeleteகருத்துக்கு மிகவும் நன்றி. உங்கள் ஆதரவு தொடரட்டும்.
ReplyDeleteஸ்ரீ....
நன்றி ஸ்ரீ....
ReplyDeleteமிக அழகான படங்கள்.
இந்த கோயில் புகழ் பெற வேண்டுமானால், யாராவது ஒரு ஜோசியர், இந்த கோயிலுக்கு போனால் அது நடக்கும், இது நடக்கும் என்று எழுதினால் போதுமானது. கூட்டம் பிச்சுகிட்டு போகும்.
மிகவும் சரியான கருத்து இராகவன். வருகைக்கு நன்றி.
ReplyDeleteஸ்ரீ....
அருமையான புகைப்படங்கள்..
ReplyDeleteஊர் சுத்திக்கிட்டே இருப்பீங்கலோ?
கொடுத்துவைச்ச ஆளுங்க நீங்க...
அட்லீஸ்ட் நாங்க போட்டோவாவது பார்த்தோமே,
நன்றி!