Pages

Saturday, May 08, 2010

வாட்டர் பாக்கெட் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!

அப்ப முதல்ல படிங்க. அப்புறமா வாங்கறதப் பத்தி யோசிப்போம். இன்றைய தேதிக்குச் சென்னையில் மட்டும் எத்தனை கம்பெனிகள் தண்ணீர் விற்கிறார்கள்? புதுப்புது கம்பெனிகள் வந்துக்கிட்டே இருக்காங்க. நம்பகமானவர்கள்? மிகக் குறைவு. 

அரசியல் தொடர்போ, லஞ்சமோ இன்னும் பல வழிகளில் நிறுவனத்துக்குப் பர்மிட் பெறுபவர்கள் சுகாதாரமான தண்ணீர் தருபவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.பெரும்பாலான கம்பெனிகள் நதிநீரைச் சுத்திகரிக்காமலே தண்ணீர் பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் அடைத்து விற்கிறார்கள். இதைச் சொல்வதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. பத்து கம்பெனித் தண்ணீர் விலையை ஒப்பிட்டாலே போதும்! விவரம் புரியும். 

HIGH BONE FEVER: சுகாதாரமற்ற தண்ணீரால் விரைவாகப் பரவிவரும் காய்ச்சல் இது. பாக்கெட் வாட்டரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரிக்கிறது. எச்சரிக்கையாக இருக்கவும். 


பல வருடங்களாகப் பணம்கொடுத்துத் தண்ணீர் குடிக்கிறோம். விலை அதிகமானாலும், தரமான, நம்பிக்கைக்கு உரிய நிறுவனங்களிடமிருந்து நீரை வாங்கிப் பயன்படுத்தலாம். 


நேற்றைக்குக் கம்பெனி ஆரம்பித்து நாளைக்குள் ISI சான்றிதழோ, அல்லது அதற்குச் சமமான ஏதாவதோ பெறும் நிறுவனங்களைக் கவனித்துப் புறக்கணிப்போம். 


கோடைக் கொடுமையைச் சமாளிக்க நீர்தான் சிறந்த வழி. நல்ல தண்ணீரைக் காய்ச்சிப் பருகினாலே போதும். 


பயணங்களில் பேருந்து நிற்கும் இடங்களில் விற்கப்படும் தண்ணீர் உத்தரவாதமாக நல்ல தண்ணீர் இல்லை. பயன்படுத்தாதீர்கள்.  சோம்பேறித்தனமில்லாமல் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது. 


எச்சரிக்கை தண்ணீருக்கு மட்டும்ல்ல. குளிர்பானங்களுக்கும் பொருந்தும். ஆரோக்கியமாய் வாழ்வதும், ஆஸ்பத்திரியில் வாழ்வதும் நமது கைகளில்தான் இருக்கிறது!





2 comments:

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!