Pages

Wednesday, July 14, 2010

இந்தியாவின் விண்வெளிச் சாதனைகள்....!

செயற்கைக்கோள் பயணத்தில் மற்றொரு மைல்கல். ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அதிநவீன தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் CARTOSAT - 2B உள்ளிட்ட 5 செயற்கைக் கோள்களுடன் PSLV - C15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணைக் கிழித்தது! இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் 17 ஆவது ராக்கெட் இது.

தரையிலிருந்து 630 கி.மீ உயரத்தில் இருந்தாலும் பூமியைத் துல்லியமாகப் படம்பிடிக்கும். நாள் ஒன்றுக்கு 14 முறை பூமியைச் சுற்றிவரும். இதன் ஆயுட்காலம் 5 முதல் 10 வருடங்கள். 78 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் நகரம் மற்றும் கிராமங்களின் செயல்பாடுகள், கட்டிடங்கள், சுரங்கப்பாதை, துறைமுகம் இவற்றின் வரைபடங்கள் துல்லியமாகக் கிடைக்கும். 



காடுகள், ஊரக சாலைகள் இவற்றை மேம்படுத்துவதிலும் இந்த செயற்கைக்கோளுக்குப் பங்குண்டு. இதனுடன், அல்ஜீரியாவின் ALSAT - 2A, கனடாவின் AISSAT - 1, சுவிட்சர்லாந்தின் TISAT செயற்கைக் கோள்களுடன் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த STUDSAT இவையும் இப்போது விண்ணில்! 

1975 ஆரியபட்டாவில் ஆரம்பித்த வெற்றிப் பயணம் இன்றுவரை பல வளர்ச்சிகளோடு பயணிக்கிறது. இடையில் சில தோல்விகள். பெரிய முயற்சிகளில் இவை இயல்புதான். உற்சாகமிழக்காமல் உழைத்த விஞ்ஞானிகள், பொறியியல் மாணவர்கள், மாணவர்களுக்கு இடமும், ஊக்கமும் அளித்தவர்கள் அனைவரையும் இந்தியா பெருமிதத்தோடு வாழ்த்துகிறது. உங்கள் கனவுகள் யாவும் வெல்க!


No comments:

Post a Comment

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!