Pages

Friday, August 13, 2010

மொபைல் ஃபோன் - சில தகவல்கள்..!

Mobile Number Portability: நம் நம்பரை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம். இந்தியா முழுவதும் அக்டோபர் 31 முதல் செயல்படும். செப்டம்பருக்குள் சோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்று சேவை நிறுவனங்களுக்குக் கட்டளை. இதற்கு மேல் தாமதம் இருக்காது என்று சத்தியம் செய்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

Third Generation (3G): துல்லியமான, விரைவான தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் தொழில்நுட்பம். 3G ஐக் கண்காணிப்பது கடினம் என்று கவலைப்படுகிறார்கள்.  அரசின் இப்போதைய கணக்குப்படி கண்காணிக்க முடிந்தால் மட்டுமே சேவையை அனுமதிக்கலாம் என்பது. மலிந்து வரும் தீவிரவாதத்தைக் கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நல்ல முடிவு. 

Blackberry: உயர்ரக மொபைல். கட்டுப்பாடு இல்லாத தகவல் பரிமாற்றமும், இணையம் சார்ந்த விஷயங்களும் போனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில் முதல் நடவடிக்கை மேற்கொண்ட நாடு சவுதி. இப்போது இந்தியாவும்! இந்தியச் சந்தையின் மதிப்பு நம்மைவிட வெளிநாட்டு வியாபாரிகளுக்கு நன்றாகத் தெரியும். புத்திசாலித்தனமாகத் தீர்வு காண்பார்கள் என்று நம்புவோம்!

Android: கூகிளின் Smartphone. வெளியானபோது ஆர்வத்தைவிட வரவேற்பு குறைவாகவே இருந்தது. நிதானமாக முன்னேற்றியிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தில் தேவையான திருத்தங்கள் செய்து அமெரிக்காவின் செல்ல ஃபோனாக மாறியிருக்கிறது Android.  Nokia, Apple, Blackberry காரர்கள் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறர்கள். பார்ப்போம்!



4 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  3. அமுதா,

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!