இசைஞானியின் ரசிகர்களுக்கு இன்னொரு நல்ல செய்தி. ஒரிஸ்ஸாவின் பெருமைக்குரிய அக்ஷய சம்மான் விருது இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது. இசைத்துறையில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தரப்படும் விருது இது!
அக்ஷய மொகந்தி ஃபவுண்டேஷன் வழங்குகிறது. 2007 ஆம் ஆண்டிலிருந்து விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம் நமது இசைஞானிக்கு! பாராட்டுப் பட்டயத்துடன் ஒரு லட்சம் ரொக்கமும் வழங்கப்படும். இதற்குமுன் பிரபல இசையமைப்பாளர்கள் மன்னா டே, குல்சார் மற்றும் பண்டிட் ஹரி பிரசாத் சவுராசியா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் புவனேஷ்வரில் விழா நடக்கும். சிம்பொனி மற்றும் ஆரட்டோரியோ போன்ற உயர்ந்த இசைக் கோர்வைகளை அமைத்த முதல் இந்திய இசையமைப்பாளரான இசைஞானியை நாம் இன்னும் பெருமைப்படுத்த வேண்டியிருக்கிறது. விருது வழங்கும் அமைப்புக்கு எனது நன்றிகள்.

வாழ்த்துக்கள் தலைவருக்கு..
ReplyDeleteஅன்பரசன்,
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஸ்ரீ....