டாக்டர் கலாம் குடியரசுத் தலைவரானபோது கவிஞர் வைரமுத்து “ அன்று இந்தியாவிற்குள் உனது வீடு இருந்தது. இன்று உனது வீட்டிற்குள் இந்தியா இருக்கிறது. உனக்கு முதல் குடிமகனாக ஆளவும் தெரியும்; கடைசிக் குடிமகனாக வாழவும் முடியும்” என்று வாழ்த்தினார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர்.அப்துல் கலாம் அவர்களை நாமும் வாழ்த்துவோம்!
இந்தியா முழுவதும் இதுவரை ஒரு கோடி மாணவர்களுக்கு மேல் சந்தித்து ஊக்கமும், உற்சாகமும் அளித்த அவரது பிறந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை மாணவர் தினமாகக் கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறது. ஐ.நா.சபைக்கு எனது நன்றிகள்!
இன்றைய இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய Inspiration திரு. கலாம் அவர்கள். அறிவியல், மொழி, நாட்டுப்பற்று, கடின உழைப்பு அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த போதும் கடைபிடித்த ஒழுக்கமும், எளிமையும் மாணவர்கள் விரும்பும் மனிதனாக்கியிருக்கிறது. அவரின் பிறந்த நாள் மாணவர் தினமாகக் கொண்டாடப்படுவது எத்தனை பொருத்தம்! வாழ்த்துக்கள் திரு.கலாம் அவர்களே! நீடூழி வாழ்க!


No comments:
Post a Comment
தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!