இயேசுவின் பிறந்த தினம் கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பரிசுகள், வாழ்த்துக்கள், பாடல்கள், மரத்தை அலங்கரித்தல் என உலகமே உற்சாகமாக இருக்கும் நாள். அனைவருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
இயேசு பிறப்பு குறித்த கவிஞர் வைரமுத்துவின் அற்புதமான பாடல்:
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே.
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்...!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தப் பாட்டு அதை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்.
Wishing You, Family and your followers-a Happy New Year 2011, will bring all Happy,Joy, Health, Wealth and Prosperity.
ReplyDeleteWith Best Wishes!
Sai Gokulakrishna
http://saigokulakrishna.blogspot.com/2010/12/100000.html
Sai Gokula Krishna,
ReplyDeleteBelated Christmas & New Year Wishes.
Sri....
கோமதி அரசு,
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்குரியவர் கவிஞர் வைரமுத்து!
ஸ்ரீ....