”படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்” என்பார் வசீகர எழுத்தாளர் சுஜாதா. உங்கள் பட்டியல் மெய்ப்பட சிறந்த வாய்ப்பு சென்னையின் 34 ஆவது புத்தகக் காட்சி! ஜனவரிதோறும் தவறாமல் சென்னையில் பிரமாண்டமாய்ப் பெய்யும் புத்தகமழை! இந்த வருடமும் சிறப்பாகப் பெய்யப்போகிறது.
காட்சியின் முதல்நாளில் ஒரு கடையையும் விடாமல் புத்தகப்பட்டியல் சேகரிப்பது வழக்கம். சில கடைகளுக்குப் பட்டியலே வந்து சேர்ந்திருக்காது. ஆயாசத்தோடு இல்லை என்பார்கள். இம்முறை அதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும்!
எனது வாங்க வேண்டிய பட்டியல் மிகக் குறைவு. (காரணம், ஞாபக மறதி!) பட்டியல் பார்க்கும்போதுதான் எவ்வளவு சிறந்த நூல்களைப் பதிப்பகம் தெரியாமல் இழந்திருக்கிறோம் என்று புரியும். இணையமும், வலைப்பூக்களும் நிறைய நூல்களை உடனுக்குடன் அறிமுகம் செய்கின்றன. இப்போது இழப்பு குறைவு!
குழந்தைகளோடு சென்று நூல்களை வாங்குங்கள். வாசிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை குழந்தைகளுக்குத் தெளிவாகத் தெரிவிக்கலாம். இதனால் விளையப்போகும் நன்மைகள் ஏராளம். நிச்சயம் ஆர்வம் தூண்டப்பட்டு புத்தகத்தின் மீது காதல் ஏற்படும்!
புத்தகச் சந்தைக்கு வரவிருக்கும் பதிவர்களைச் சந்திக்க ஆர்வம். என்று, எத்தனை மணிக்கு என்பதை முன்கூட்டியே இடுகையில் தெரிவித்தால் சந்திக்க வசதியாக இருக்கும்! சென்னையின் மிகச்சிறந்த திருவிழா வெற்றிகரமாய் நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

4 கருத்துக்கள்:
வலையுலகில் என்றுமே புத்தக மழை. கருத்துக்கு மிக்க நன்றி.
ஸ்ரீ....
விரைவில் பதிவுகளை இணைக்கிறேன். அறிவிப்புக்கு நன்றி.
ஸ்ரீ....
Post a Comment