2011. திருவிழா தொடங்கப் போகிறது. உலகக் கோப்பை குறித்த எனது நினைவுகள் உங்களுக்காக!
1987. நான் முதலில் பார்த்த உலககோப்பை. (LBW ன்னா என்னன்னு தெரியாது!) சீனியர்கள் ஆச்சரியப்படும் போது ஆச்சரியப்பட்டு, பயப்படும் போது பயம் எனக் குழப்பக் கோப்பை. ஸ்ரீகாந்த்தும், கவாஸ்கரும் நியூஸிலாந்தைத் துவைத்தது மட்டும் நினைவில் இருக்கிறது! (கவாஸ்கரின் ஒரே ஒருநாள் போட்டி சதம், சேட்டன் ஷர்மாவின் ஹாட்ரிக் போட்டியின் சுவாரசியங்கள்!).
1992. Coloured Uniform, Day-Night Matches, White Ball எனப் புதுமைக் கோப்பையாக மிளிர்ந்தது. பல வருடத் தடைக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா பங்கேற்று சிறப்பாக விளையாடியது, (Duckworth-Lewis தென்னாப்பிரிக்காவை வென்றனர்!) பாகிஸ்தானைத் தவிர எந்த அணியோடும் தோற்காத நியூஸிலாந்து, (Mark Greatbatch Opening ல் முழு சுதந்திரத்தோடு பவுலர்களை நொறுக்கியது, Deepak Patel முதல் ஓவர் ஆஃப் ஸ்பின்) பாகிஸ்தானையும், ஸிம்பாபேயையும் மட்டும் வீழ்த்திய பெருமையோடு இந்தியா, வழக்கம் போல் ஃபைனலில் தோற்ற இங்கிலாந்து, அதிர்ஷ்டக்கார பாகிஸ்தான் என Colourful நினைவுகள்!
1996: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்தியது. தென்னாப்பிரிக்காவோடு லாரா சொல்லி அடித்த சதம், வெஸ்ட் இண்டீஸ் கென்யாவோடு தோற்ற அதிர்ச்சி, சச்சின், மார்க் வாஹின் சதங்கள், கும்ப்ளேவின் விக்கெட்டுகள், பாகிஸ்தான் போட்டியில் ஜடேஜாவின் எக்ஸ்பிரஸ் இன்னிங்ஸ், அமீர்சோஹைலின் திமிருக்கு வெங்கடேஷ் பிரசாத்தின் பதிலடி, ஜெயசூர்யா - கலுவிதரானா இணைந்து மிரட்டியது, கல்கத்தா கலவரம் (Semi Final), இறுதிப் போட்டியில் அரவிந்த டி சில்வாவின் அற்புதமான சதம். இவை 96 கோப்பையின் முத்துக்கள். (போட்டியை நடத்தும் நாடு கோப்பையை வெல்லாது என்ற மூடநம்பிக்கையைத் தகர்த்தது இலங்கை!)
1999. இங்கிலாந்தில் நடந்தது. லான்ஸ் க்ளூஸ்னர் என்ற தென்னாப்பிரிக்க இளைஞரைப் பற்றித் தெரியாதவர்கள் 1999 கோப்பையில் தெரிந்து கொண்டார்கள். All-rounder ன் முக்கியத்துவத்தை உணர்த்தினார் லான்ஸ். தந்தையின் இறுதிச் சடங்கு முடிந்து கென்யாவோடு சச்சினின் 140 Not Out கோப்பையின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்! கங்குலியின் 183 Not Out இலங்கையைச் சிதறடித்தது. பாகிஸ்தானை இந்தக் கோப்பையிலும் எளிதாக வென்றது இந்தியா. 1999 ன் மிகச்சிறந்த போட்டி, ஆஸ்திரேலியா -தென்னாப்பிரிக்கா Semifinal! வார்னே யார் என மீண்டும் அழுத்தமாக நிரூபித்த ஆட்டம். ஃபைனலிலும் கலக்கினார் ஷேன். பாகிஸ்தானை மிக எளிதாக ஊதித்தள்ளியது ஆஸ்திரேலியா!
2003. தென்னாப்பிரிக்காவில்! ஆஸ்திரேலியாவைத் தவிர இந்தியா யாரிடமும் தோற்கவில்லை! பாகிஸ்தானுடல் சச்சினின் 98, கோப்பையின் சிறந்த இன்னிங்ஸில் ஒன்று! (தொடர் நாயகன் சச்சின் - 673 ரன்கள்!) சச்சின் சேவாக்கின் அதிரடியும், இந்தியப் பந்துவீச்சும் வெற்றிக்குக் காரணங்கள். ஆஸ்திரேலியா எந்தப் போட்டியிலும் தோற்கவில்லை! முதல் போட்டியில் லாராவின் சதம் (மீண்டும் தென்னாப்பிரிக்கா!), சமிந்தா வாஸ் ஒரே ஓவரில் நான்கு விக்கெட், John Davison ன் அதிரடி சதமும், வெஸ்ட் இண்டீஸின் பதிலடியும், ஃபைனலில் பாண்டிங் சதமும் கோப்பையின் முக்கிய நிகழ்வுகள். வழக்கம் போல் ஆஸ்திரேலியா Champions!
2007. முதன்முதலாய் மேற்கிந்தியத்தீவுகளில்! அயர்லாந்து, பங்களாதேஷின் எழுச்சியும், இந்தியா, பாகிஸ்தான் வீழ்ச்சியும் ஒரே நாளில் நடந்தது. உலகக் கோப்பை, இந்த அணிகளின் வெளியேற்றத்தில் காலிக்கோப்பையானது. ஃபைனலில் ஆடம் கில்கிறிஸ்டின் 149 மறக்கமுடியாதது. (பாதிப் போட்டிகளை நான் பார்க்கவில்லை!)
2011. இந்தியா வெல்லும், வெல்லும் என்று தோனியின் ரத்த அழுத்தத்தை ஏற்றுகிறது மீடியா. 2011, ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்று அதிக நம்பிக்கையோடு இருக்கிறேன். 2007 ல் கற்ற பாடத்தால் ஒவ்வொரு அணிக்கும் முதல்சுற்றில் ஆறு ஆட்டங்கள்! Well done ICC! வெல்க இந்தியா!!!!
![]() |
| கிரிக்கெட் ஜுரம்ம்ம்ம்ம்ம்! |

















4 கருத்துக்கள்:
கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்தியா, மிக வலுவாக இருக்கிறது. நம்பிக்கையோடு காத்திருப்போம்.
ஸ்ரீ....
Our resources are being wasted one way the other. Meanwhile, 20/20 matches gives immense entertainment and satisfaction to most of our Countrymen. In that sense day-night matches can be accepatable. I am not writing against your remarks. I will try to come up with such article. Thanks for your suggestion.
Sri....
Post a Comment