Friday, February 25, 2011

கண்டிப்பா ஸ்டேடியத்துலதான் மேட்ச் பார்க்கணுமா...?

கிரிக்கெட் பற்றிய மற்றொரு வயிற்றெரிச்சல் கலந்த இடுகை. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் விழுந்த ஒவ்வொரு அடியும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மீதும் விழுந்ததாகக் கருதுகிறேன். மிகவும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விவகாரம். இவ்வளவு ரத்தம் சிந்தியிருக்க வேண்டியதில்லை!

சொந்த நாட்டில் நடக்கும் போட்டிக்கு டிக்கெட் வாங்க வந்தவர்கள் மீது லத்தி அடி. நடந்த வன்முறையைச் சிதறிக் கிடந்த செருப்புகள் சொல்கின்றன.  முதல்நாள் இரவிலிருந்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கிடைத்தது டிக்கெட் அல்ல; கொடுமையான தண்டனை!

விற்பனை தொடங்கிய போது ஒருவருக்கு ஒரு டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஒருவருக்கு இரண்டு டிக்கெட்! காத்திருந்தவர்களின் ஏமாற்றம் கோபமாக மாறியதில் வியப்பில்லை. எவ்வளவு டிக்கெட் எந்த விகிதத்தில் விற்க வேண்டும் என்பதைக் கூடத் திட்டமிடாமல் என்னதான் செய்தார்களோ??


ரசிகர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை. இடுகையின் தலைப்பை வாசிக்கவும். சிந்திக்கவும். 

0 கருத்துக்கள்: