சிறிய நாடுகளை அல்லது டெஸ்ட் அங்கீகாரம் பெறாத நாடுகளை [Associate Countries] உலகக் கோப்பையில் சேர்ப்பதால் போட்டிகளின் சுவாரசியம் குறைகிறது என்கிறது ICC. மிக மோசமான முடிவு.
இப்போது வெற்றிகரமாகத் திகழும் அனைத்து நாடுகளுமே ஒருகாலத்தில் மரணஅடி வாங்கியவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி இன்று கிடைத்திருக்கும் புகழுக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டவர்கள். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து எல்லா பக்கமும் கல்லெறிகிறது ICC!

ரிக்கி பாண்டிங், ”என்னதான் துரத்தி துரத்தி அடித்தாலும் சிறிய அணிகள் கற்றுக் கொள்வதில்லை” என்று ICC க்கு ஆதரவாகக் “கவலை” தெரிவித்திருக்கிறார். அபாயமான கருத்து. வளர விரும்பும் அணிகளுக்கு வாய்ப்பு தரக் கூடாது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை! (ஒருவேளை புதுப்புது அணிகளிடமும் ஆஸ்திரேலியா தோற்கலாம் என்ற பயமோ?).
மீண்டும் ICC அறிவாளிகளைப் பற்றிப் பேசுவோம். Associate Countries பெரும்பாலும் பெரிய அணிகளுடன் விளையாடுவதில்லை. இதற்கும் ICC யின் முட்டாள்தனமான போட்டி அட்டவணைகளே காரணம். உலகக்கோப்பையிலும் இல்லை என்றால், எதற்காக அவர்களுக்கு Associate Countries என்ற அங்கீகாரம்???
கிரிக்கெட்டைப் பணம் இயக்குகிறது என்பது சில வருடங்களாக விமர்சகர்களின் கருத்து. அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது ICC யின் அணுகுமுறை. உலகக்கோப்பை விறுவிறுப்பாக இருக்க வேண்டுமாம்! 2003 ல் கென்யா Semifinal, 2007 ல் அயர்லாந்து, பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் என சிறிய அணிகளும் இயன்றவரை தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறது.
ICC க்கு என்ன நஷ்டம்? சிறிய அணிகள் ஆடுவதால் அதிகப் போட்டிகள், விளம்பரங்கள், ஒளிபரப்பு உரிமை எனக் கூடுதலாகப் பணம் சேர்க்கவாவது இந்த அணிகள் உதவாதா? கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் யாரும் இந்த முட்டாள்தனத்திற்குச் சம்மதிக்கமாட்டார்கள்! ICC, தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவோம்!

2 கருத்துக்கள்:
http://myblogonly4youth.blogspot.com/2011/02/blog-post.html
Post a Comment