Friday, March 11, 2011

வலைப்பூக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

அரசாங்கம் வலைப்பூக்களையும் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. அதற்குத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008 உதவுகிறது. Intermediary என்ற பிரிவில் வலைப்பூக்கள், Web-Hosting, Internet Service Providers, Search Engines, Online Payment, Auction Sites & Cyber Cafes இவையெல்லாம் Intermediaries! Twitter, Facebook எல்லாம் இண்டெர்மீடியரிஸ் கிடையாதா என்று கொதிக்கிறார்கள் வலையுலக மக்கள்!

Intermediary, இணையத்தில் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி சேமிப்பது, தகவல் பெறுவது, தகவலைப் பரப்புவது இவையெல்லாம் என்கிறது சட்டம். வலைப்பூக்களை இதோடு சேர்த்ததால் இவ்வளவு விவாதங்கள், விமர்சனங்கள்!

வலைப்பதிவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்கிறார்கள். நமக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்! பின்னூட்டங்கள் threatening, abusive, objectionable, defamatory, vulgar, racial ஆக இருந்தால் அதற்கு சட்டரீதியான பொறுப்பேற்க வேண்டியது எழுதியவரின் கடமை!
 
ஆனால், கூகிள் இதனை விரும்பவில்லை! இணையத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளில் வலைப்பூக்களும் ஒன்று. யாரோ செய்யும் தவறுக்குப் பதிவர்களைப் பொறுப்பாக்குவது நியாயமில்லை என்கிறது பிளாக் சேவையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான கூகிள்!


வலைப்பூக்களைச் சேர்த்தது சரியா?

எனது கருத்தில் சரி. இணையம் வழங்கும் அளவற்ற சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துபவர்கள் எத்தனை சதவிகிதம்? கருத்துக்களை விட்டுவிட்டு எழுதியவரைத் தாக்குவது, ஆபாசப் பின்னூட்டங்கள், படங்கள் இவை ஒழிய வேண்டுமென்றால் கட்டுப்பாடு தேவை! அரசாங்கம் விதிப்பதற்குப் பதிலாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டால் இணையத்தில் யாவரும் நலம்!

8 கருத்துக்கள்:

//இணையம் வழங்கும் அளவற்ற சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துபவர்கள் எத்தனை சதவிகிதம்?//

உண்மைதான். சுயக்கட்டுப்பாடு அவசியம்தான்.
 
அனைவருக்கும் எச்சரிக்கையான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
 
//...கருத்துக்களை விட்டுவிட்டு எழுதியவரைத் தாக்குவது

என்றைக்குத்தான் திருந்தப் போகிறோமோ?
 
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி
 
ந.ர.செ.ராஜ்குமார்,

விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.

ஸ்ரீ....
 
Agape Tamil Writer,

பாராட்டுக்கு நன்றி. நான் NHM Writer பயன்படுத்துகிறேன். வசதியாக இருக்கிறது. உங்கள் Writer ஐ விரைவில் பயன்படுத்திப் பரிந்துரைக்கிறேன்.

ஸ்ரீ....
 
Sriakila,

நன்றி.

ஸ்ரீ....
 
கக்கு - மாணிக்கம்,

நன்றி.

ஸ்ரீ....