Pages

Friday, March 11, 2011

வலைப்பூக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

அரசாங்கம் வலைப்பூக்களையும் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. அதற்குத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008 உதவுகிறது. Intermediary என்ற பிரிவில் வலைப்பூக்கள், Web-Hosting, Internet Service Providers, Search Engines, Online Payment, Auction Sites & Cyber Cafes இவையெல்லாம் Intermediaries! Twitter, Facebook எல்லாம் இண்டெர்மீடியரிஸ் கிடையாதா என்று கொதிக்கிறார்கள் வலையுலக மக்கள்!

Intermediary, இணையத்தில் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி சேமிப்பது, தகவல் பெறுவது, தகவலைப் பரப்புவது இவையெல்லாம் என்கிறது சட்டம். வலைப்பூக்களை இதோடு சேர்த்ததால் இவ்வளவு விவாதங்கள், விமர்சனங்கள்!

வலைப்பதிவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்கிறார்கள். நமக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்! பின்னூட்டங்கள் threatening, abusive, objectionable, defamatory, vulgar, racial ஆக இருந்தால் அதற்கு சட்டரீதியான பொறுப்பேற்க வேண்டியது எழுதியவரின் கடமை!
 
ஆனால், கூகிள் இதனை விரும்பவில்லை! இணையத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளில் வலைப்பூக்களும் ஒன்று. யாரோ செய்யும் தவறுக்குப் பதிவர்களைப் பொறுப்பாக்குவது நியாயமில்லை என்கிறது பிளாக் சேவையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான கூகிள்!


வலைப்பூக்களைச் சேர்த்தது சரியா?

எனது கருத்தில் சரி. இணையம் வழங்கும் அளவற்ற சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துபவர்கள் எத்தனை சதவிகிதம்? கருத்துக்களை விட்டுவிட்டு எழுதியவரைத் தாக்குவது, ஆபாசப் பின்னூட்டங்கள், படங்கள் இவை ஒழிய வேண்டுமென்றால் கட்டுப்பாடு தேவை! அரசாங்கம் விதிப்பதற்குப் பதிலாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டால் இணையத்தில் யாவரும் நலம்!

Tuesday, March 08, 2011

கவிஞர் வாலியின் கவிதாஞ்சலி!

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு கண்ணீர் அஞ்சலி...
ஒரு
புலிப் போத்தை ஈன்று
புறந்தந்து-
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு?

...

மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன் -
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று...
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;
அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

...

'தம்பி!
தம்பி!’ - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் -
இனம்
இருந்தது - அந்த...
நம்பியை
நம்பி;அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!

...

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை...
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்டவெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
தப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!

...

'இருக்கிறானா?
இல்லையா?’
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு -
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

...

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ...
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி -
வந்தாய் சென்னை; அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

...

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித்தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம்தராத - எங்கள்
தமிழ்மண் -
நிரந்தரமாய்த்
தேடிக்கொண்டது பழி!


நன்றி விகடன்.


Tuesday, March 01, 2011

பட்ஜெட் 2011 - 2012

எனக்கு என்னோட செலவுகளையே கணிக்கத் தெரியாது! இதுல நாட்டு பட்ஜெட்டப் பத்தி நானென்ன சொல்ல? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மட்டும். நன்றி: தினமலர். 

இன்றைய பட்ஜெட்டிற்கு பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் 500 க்கும் அதிகமாக ஏறுமுகமாக சென்று 18 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. முன்னதாக பட்ஜெட் உரையில் பிரணாப் கூறுகையில்; நாட்டில் உணவுப்பணவீக்கம், ஊழல் பிரச்னைகள் பெரும் கவலை அளிப்பதாவும், இதனை சீர்செய்ய உரிய நடவடிக்கைள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். பணவீக்கம் மெல்ல, மெல்ல சீரடையும் என உறுதியளித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருக்கும் , வேளாண்வளர்ச்சி 5. 6 சதவீதமாகவும், தொழில்வளர்ச்சி8.1 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கூறினார்.

நபார்டுதிட்டத்திற்கு 3 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதாகவும், விவசாயதுறை முன்னேற்றத்திற்கு 7 ஆயிரத்து 860 கோடி ஒதுக்கியிருப்பதாகவும், முக்கிய அம்சங்களை அறிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* 2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும்.

* 2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும்

* உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதம் மானியம்

* விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை அதிகரிக்க முடிவு

* நாடு முழுவதும் புதிதாக 15 உணவுப்பூங்கா திறக்க முடிவு

* மண்ணெண்ணெய், உரத்திற்கு நேரடி வரி மானியம்

* வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு

* வீட்டுக்கடன் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

* பாரத்நிர்மாண் திட்டத்திற்கு 58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* கல்வி முதலீட்டு தொகை 24 சதம் உயர்த்தி நடப்பாண்டில் 52 ஆயிரத்து 57 கோடி ஒதுக்கீடு.

* அங்கன்வாடி :ஊழியர்களுக்கு 1500 லிருந்து 3 ஆயிரமாக ஊதிய உயர்வு

* சர்வசிக்ச அபியான் ( அனைவருக்கும் கல்வி ) திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர 5 அம்ச திட்டம்

* கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* முதியோர் உதவி பென்சன் திட்டத்தில் வயது ( 65 ல் இருந்து 60 வயதாக ) வரம்பு தளர்வு

* உணவுப்பாதுகாப்பு திட்டம் நடப்பாண்டில் நிறைவேற்ற உறுதி

* தாக்குதலில் காயத்திற்குள்ளாகும் பாதுகாப்பு படை வீரர்களின் கருணைத்தொகை உயர்வு

* நதிகள் சீரமைப்பு செய்ய சிறப்பு திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி.

* நக்சல் பாதிப்பு பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த சிறப்பு ( 25 முதல் 30 கோடி வரை) திட்டம்.

* தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1. 60 லட்சத்தில் இருந்து 1. 80 லட்சமாக உயர்வு

* 80 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கு ரூ. 500 உதவித்தொகை

* அடிப்படை உணவு மற்றும் எரிபொருளுக்கு சுங்கவரி, ‌சேவை வரியில் மாற்றம் இல்லை

* மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமான வரிவிதிப்பில் ரூ. 5 லட்சம் வரை விதிவிலக்கு

* இரும்பு ,சிமெண்ட் உற்பத்தி வரியில் சலுகை

* சூரிய மின்சக்தி தயாரிப்புக்கான பலகை இறக்குமதி வரி ரத்து

* திரைப்படத்துறையினருக்கு சலுகை

* விமான கட்டண சேவை வரி உயர்வு

*ஜம்மு காஷ்மீர் மேம்பாடுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

*கம்பெனி்களுக்கான கூடுதல் வரி குறைப்பு

*வெளிநாட்டினர் முதலீட்டுக்கு ஊக்குவிப்பு

பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.