Pages

Thursday, March 08, 2012

பத்தாயிரம் மைல் பயணம். - வெ. இறையன்பு.

ஏன் இந்தத் தலைப்பு? அதற்கு முதல் அத்தியாயத்திலேயே விடை கிடைக்கிறது. சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. “ஒருவன் மரணமடைவதற்கு முன்பு பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும் ; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்!”

பயணங்கள் களிப்பு அளிப்பவை. இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் மேற்கொள்ளும் பயணங்கள் சிலிர்ப்பானவை. தேநீரின் வரலாறு முதல் பிட்ஸாவின் ஊடுருவல் வரை இன்றைய தமிழனுக்குப் பயன்படும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது, “பத்தாயிரம் மைல் பயணம்”. 

ஆசிரியர் வெ.இறையன்பு ஏற்கனவே தன் தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் புகழ் பெற்றவர். இவரை அறியாதவர்கள் இந்தியாவில் குறைவு. காய்கறிகள், சிறு தானியங்கள், அரிசி, இட்லி, தேநீர், காப்பி என் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் உணவுகளின் நதிமூலத்தை அறிய, அறிய  ஆச்சரியம் பிறக்கிறது. தமிழுக்கு இந்த வகை நூல் புதிது.  ஆசிரியருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்! இனி, புத்தகப் பக்கங்களிலிருந்து நீங்கள் ருசிப்பதற்குச் சில “சுவையான” குறிப்புகள்!

ஆம்லேட்டின் வயது 4,000.

அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தபோது சர்க்கரையால் கவரப்பட்டு இங்கிருந்து சர்க்கரையை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றார். 

1868 வரை மிளகாயின் பூர்வீகம் இந்தியாதான் என்று நம்பிக் கொண்டிருந்தனர்.

இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் வாசனை மசாஜ் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மிளகு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முன்னோடி. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை தங்கத்திற்கு விற்கப்பட்டது!

ரோஜா ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் பரிமளித்தது. ஆசிய கண்டத்தில்தான் தோன்றியது!

தக்காளி காயா? பழமா? என்கிற பெரிய விவதம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்தது. வன் நிக்ஸ் என்பவர் இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்றார்!

உலகில் பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னிலை வகித்தது இந்தியாதான்! அதற்கு மெடிக்கல் பதம் ரீ கன்ஸ்ட்ரக்‌ஷன் (Re-Construction). இந்தியாவில் இந்த ரகசியத்தைப் பானை செய்பவர்களுடைய குடும்பங்கள் பேணிக் காத்து வந்தன!

ஜப்பானில் கி.பி 999 ஆம் ஆண்டு பூனை குட்டிபோட்டால் கல்யாணத்தைப் போல மிகப் பெரிய கொண்டாட்டம் நடக்கும்!

பன்றிகள் நாம் நினைப்பது போல் முட்டாள் ஜென்மம் அல்ல; புரிந்துகொள்ளும் திறன் அவற்றுக்கு அதிகம் உண்டு!

இந்தியாவின் இரண்டு மன்னர்கள்தான் தனியொரு வீரனாக நின்று, மதங்கொண்ட யானையை வீழ்த்தியிருக்கிறார்கள். ஒருவர் அக்பர், இன்னொருவர் இராஜேந்திர சோழர்!

கி.மு 15,000, நம் நாகரிகத்தின் முக்கியமான திருப்புமுனை. அப்போதுதான் கீழே விழுகிற விதைகள் முளைக்கிறது என்ற பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது!

மக்காச்சோளத்தை மற்ற தானியங்களிலிருந்து வேறுபடுத்த இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் குடியேறிகள் “Indian Corn" என்று அழைத்தார்கள். இன்று உலகத்திலேயே அதிகமாகப் பயிரிடப்படுகிற பயிர் மக்காச்சோளம்தான்!

அரிசி என்கிற தமிழ்ச்சொல்தான் Rice என்று மருவியது. அரிசிக்கு லத்தின் சொல் “ஒரைசா”. அரிசி குறித்து செல்யூகஸ் நிகேடர், சந்திரகுப்த மௌரியரிடம் தூதராகப் பணியமர்த்திய மெகஸ்தனிஸ் எழுதியிருக்கிறார். “இந்தியர்கள் மிகவும் சொற்பமாகச் சாப்பிடுகிறார்கள். ஆனந்தமயமாக வாழ்கிறார்கள். எளிமையாக இருக்கிறார்கள். பலி கொடுக்கும்போது மட்டுமே மது அருந்துகிறார்கள். அவர்கள் மது அரிசியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் அரிசியே அவர்களின் பிரதான் உணவு. அவர்கள் நல்ல “டேஸ்ட்” உள்ளவர்களாக இருக்கிறார்கள். பசித்தால் மட்டுமே ருசிக்கிறார்கள்.”

மேலே குறிப்பிட்டவை 258 பக்கப் பயணங்களில் கிடைக்கும் தகவல்களில் ஒரு சதவிகிதத்துக்கும் கிழே! இன்னும், இன்னும் ஆச்சச்ரியங்கள் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியரின் உழைப்பு அளவிடமுடியாதது. சிக்கலான செய்திகளைக் கூட எளிய மொழியில் விளக்கியிருப்பது இவரின் பலம்!

 உதவிய 52 நூல்களைக் குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் சான்றுகள். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்! இறையன்பு மேற்கொண்டிருப்பது புதிய அணுகுமுறை. வழிவகுத்திருக்கிறது புதிய தலைமுறை!
8 comments:

 1. இறையன்பு மேற்கொண்டிருப்பது புதிய அணுகுமுறை. வழிவகுத்திருக்கிறது புதிய தலைமுறை!


  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. இராஜராஜேஸ்வரி,

  தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ....

  ReplyDelete
 3. i realised the facts he included, where the book avail in puducherry. pls inform the details in my email. yoursarun85@gmail.com.

  Congrats for bring us the interesting facts

  ReplyDelete
 4. சகோதரி ஸாதிகா,

  என் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு கோடானு கோடி நன்றிகள். நிச்சயமாக வலைச்சரத்துக்கு வருகிறேன். கருத்தினைத் தருகிறேன்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 5. Arun,

  I will contact the publishers to keep you posted about the availability on your territory. Thank you so much for your comments.

  Sri....

  ReplyDelete
 6. Excellent Review, My best wishes for writing an attractive review on a book.
  You could include "Pro's and Con's " of the book.

  ReplyDelete
 7. Thiyagarajan,

  Thanks for your encouraging comment. If possible, I will include that too!

  Sri....

  ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!