Pages

Thursday, March 29, 2012

எம் இடர் கடிவான், திருவரகுணமங்கை (நத்தம்).

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விஜயாஸனர் (பரமபத நாதன்) கோவில். ஒன்பது திருப்பதிகளில் இது இரண்டாவது. சந்திரன் ஸ்தலம். திருவரகுணமங்கை என்ற புராணப் பெயர் இருந்தாலும், நத்தம் என்றே பரவலாக அறியப்படுகிறது.

சிறிய ஆலயம். சிறப்பாகப் பராமரிக்கிறார்கள். உள்ளே நவ திருப்பதிகள் உட்பட இதர ஆன்மீக நூல்களும் விற்கப்படுகின்றன. ஆலயம், 1000 முதல் 2000 வருடங்களுக்கு முந்தையது.

நம்மாழ்வார் பாடல்:

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.

மற்றொரு அழகான ஆலயம்!


2 comments:

  1. படங்கள் அனைத்தும் அருமை ! நன்றி !

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன்,

    தங்களின் தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!