Pages

Monday, May 07, 2012

மாயக்கூத்தன் - பெருங்குளம்.

சாலைக்கு இந்தப் பக்கம் ஆலயம். அந்தப்பக்கம், தாமிரபரணி. எழில் மிகுந்த ஆலயம். திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 7 கிலோ மீட்டர்.

மூலவர் - வேங்கடவாணன், ஸ்ரீநிவாசன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார் - அலமேலுமங்கைத் தாயார், கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.

உற்சவர் - மாயக்கூத்தன்.

தீர்த்தம் - பெருங்குளத் தீர்த்தம்.

பாடியவர் - நம்மாழ்வார்.

ஒன்பது கோள்களில் இது சனிக்கான தலம். ஒன்பது திருப்பதிகளில் இது ஏழாவது. மூலவர், வேங்கடவாணன், உற்சவர், மாயக்கூத்தன்.வேதசாரன் என்ற பக்தனின் மகள் பெருமாளைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி தந்து திருமணம் செய்து கொண்டதாகத் தலவரலாறு.  

மாயக்கூத்தன்: வேதசாரனின் மனைவி குமுதவல்லியை அம்சநாரன் என்ற அசுரன் கடத்திச் சென்று இமயத்தில் சிறைவைக்கிறான். மனைவியை மீட்டுத்தரும்படி பெருமாளிடம் மன்றாடுகிறார் வேதசாரன். கருடவாகனத்தில் இமயம் சென்று அசுரனிடமிருந்து மீட்டுவருகிறார். 

பாலிகாவனத்தில் திருமால் இருப்பதை அறிந்த அசுரன் இங்கு வந்து போரிடுகிறான். திருமால் அரக்கனை வென்று அவன் தலைமீது நடனமாடி அழிக்கிறார். நர்த்தனம் ஆடிய காரணத்தால் சோரநாட்டியன் என்றும் மாயக்கூத்தன் என்றும் பெயர் பெறுகிறார் பெருமாள். 

திருக்கோயிலின் சிற்பங்களும், சிறிய தடாகமும் மிகச் சிறப்பானவை. காண்பவர் கருத்தைக் கவரும் ஆலயங்களுள் ஒன்று!

பின்குறிப்பு: என் பிறந்த நாள் பதிவு. வாழ்த்தியவர்களுக்கும் / இருப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!





 

2 comments:

  1. எவ்வளவு அழகான படங்கள் ! சூப்பர் !

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன்,

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!