Pages

Tuesday, May 08, 2012

காய்சின வேந்தன் - திருப்புளியங்குடி.

அழகான குளத்தையும், வயல்வெளியையும் பின்னணியாகக் கொண்ட ஆலயம். திருநெல்வேலியிலிருந்து 32 கிலோமீட்டர். திருவரகுணமங்கையில் இருந்து (நத்தம்) 1 கிலோமீட்டர். 

மூலவர் பூமிபாலகர் 12 அடி நீளமுள்ள மிகப்பெரிய திருமேனி. சயனத் திருக்கோலத்தை முழுமையாகத் தரிசிக்க இயலாது! வெளியில் உள்ள சாளரத்தில் இருந்து திருவடியைத் தொழலாம். 

உற்சவர் காய்சினவேந்தன். தாயார், மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடிவள்ளி.  நவக் கிரகங்களில் இது புதன் தலம். ஒன்பது திருப்பதிகளில் நான்காவது. 


                                    கிடந்த நாள் கிடந்தாய்; எத்தனை காலம்
                                         கிடத்தி? உன் திரு உடம்பு அசைய!
                                   தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் அடிமை
                                        வழி வரும் தொண்டரோர்க்கு அருளி,
                                   தடம் தோள் தாமரைக்கண் விழித்து நீ எழுந்து உன்
                                        தாமரை மங்கையும் நீயும்,
                                  இடம் கொள் மூவுலகும் தொழ, இருந்தருளாய்--
                                        திருப்புளிங்குடிக் கிடந்தானே!
                                                                                                            நம்மாழ்வார்.


4 comments:

  1. அருமை ஸ்ரீ அக்கா . மிக அழகான வண்ணப்படங்களுடன் காய்சினவேந்தன், தாயார், மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், ....... தரிசணம் மற்றும் , மிகவும் அற்புதமான கோவிலின் அமைதி கண்டேன். very superb,....

    ReplyDelete
  2. கோவை நேரம்,

    தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  3. VijiParthiban,

    தங்களின் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!