தாமிரபரணித் தென்கரையில் திருநெல்வேலியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆலயம். ஒன்பது கோள்களில் இது சந்திரனுக்கான கோவில்.
மூலவர், மகர நெடுங்குழைக்காதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்), உற்சவர், நிகரில் முகில் வண்ணன். தாயார், குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார்.
பஞ்சம் நீங்கியது! முன்பு, விதர்ப்ப தேசத்தில் பல வருடங்களாகப் பருவமழை தவறியதால் கடும் பஞ்சம் நிலவியது. மன்னன் தனது குருவிடம் பஞ்சம் நீக்க ஆலோசனை கேட்கிறான். குரு, “திருப்பேரையில் மகர நெடுங்குழைக்காதனை வேண்டினால் பஞ்சம் தீரும்” என்றார். மன்னனும் அவ்வாறே வந்து வழிபட்டுத் தனது நாட்டுப் பஞ்சத்தைப் போக்கினான். மழை வேண்டுபவர்கள், மகர நெடுங்குழைக்காதனை வேண்டினால், வேண்டுதல் பொய்க்காது!
”கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இப்பகுதியின் சொலவடை. நிகரில் முகில் வண்ணனும், அவனது ஆலயமும் அத்தனை எழிலானது!















"கோவிலுக்கு சென்று வந்தது போல் இருந்தது ! நன்றி நண்பரே !"
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்,
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
ஸ்ரீ....